October 14, 2011

காதல் ஹைக்கூ


நித்தமும் உன்னுடன் வாழ்கிறேன்..
உயிரிலே கலந்த காற்றாய்
நீ என்னுள் சூழ்ந்து கொண்ட நொடி தோறும் ...

மணமேடை மனவாசகம்


இராபகல் பாராது 
இமை பொழுதும் உன்னை எண்ணும் 
என் இதயத்துக்கு இன்னும் ஓர் ஆசை ...


அளவில்லா அன்பின் கடலில்
நித்தமும் வாழ்ந்தாலும் 
சிறு பொழுதேனும் 
உன் கை விரல் இணைப்பின் 
பிரியாமல் வாழ வேண்டும் என்று ...

காத்திருக்கிறேன் 
உன்னோடு கைகோர்த்து 
உலா வரும் அந்த ஒரு நொடிக்காக...!!

காதல்


உன் நினைவுகள் 
ரணமாய் என்னை தீண்டினாலும் 
என் கண்கள் 
பல நாட்களாய் காத்திருக்கிறது
உன் வருகைக்காக...

September 6, 2011

வாழ்க்கைப் பயணம்

நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவ்லை
இத்தனை வருட பயணத்தில்
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை
கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தால்
தொடங்கிய இடமும் தெரியவில்லை
தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டிக் கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது....
எங்கே போகிறேன்
ஏன் போகிறேன்
என்றுதான் தெரியவில்லை......

July 6, 2011

நினைவு..

என்றும் உன் நினைவு மட்டும் என் கண்ணில்
கரையா நிலவாய் இருக்க
கலக்கம் இன்றி காத்து இருக்கிறேன்
நீ என்னை கரம் பிடிக்கும் நொடிக்காக ...





உணர்வு
............................................................

தென்றலும் தீண்டவில்லை...
குளிர் மழையும் என்னை தொட வில்லை...
ஆனாலும் சிலிர்த்தேன்...
உன் பார்வை என் மேல் விழுந்ததால்...

February 16, 2011

வலி


மனதில் பல வலிகள் இருந்தாலும்...
புன்னகை என்ற ஒரு பூவாள் 
மறைக்கும் சக்தி இருப்பதால் தானோ ..
மேலும் துன்பங்கள்
இன்பமாய் என்னை அடைகிறது...
வலிகளின் வாழ்விடம் நான் என்று

February 12, 2011

என் இனிய நட்பாக....

குறுஞ் செய்தியால்

மனம் நிரப்பும்

வித்தைக் கற்றவளே...

வார்த்தைகளில்

உன் உருவம் செதுக்கும்

உத்தமச் சிற்பியே...

அள்ளக் குறையாத

அன்பைச் சுரக்கும்

நட்பெனும்

அட்சயப் பாத்திரத்தில்

ஆண்பெண் எனும்

வேற்றுமை குறியீடு களைந்து

மதவாத சாதீய

மாச்சர்யங்கள் மறந்து

கரும்பில் இனிப்பாய்

கடலில் உப்பாய்

கலந்தோம் ஒன்றாய்...

வாழ்வு முழுதும்

நீடிக்கும் நட்பால்-நம்

வாழ்நாளே நீடிக்கும்..

உன் வார்த்தை சுமந்த

காற்றலைகூட

கண்ணீர் துடைக்கும் !

தவமாய் பெற்ற உன்னை

காலம் முழுவதும் காத்திருப்பேன்

என் இனிய நட்பாக....

காதல்

கல்லறை கூட அழகு தான்
உண்மையான காதல்
அமைதியாய் உறங்கும் போது

புத்தாண்டு வாழ்த்துக்கள்


கடந்த வருடக் கவலைகள் யாவும்
கலைந்தே போகட்டும்..
வலியும் ரணமும் வாழ்க்கை என்ற
வார்த்தை மாறட்டும்..
மரத்துப் போன மனங்களில் கொஞ்சம்
ஈரம் துளிர்க்கட்டும்..
பட்டுப் போன இதயம் முழுதும்
பசுமை படரட்டும்..
புதிதாய் பிறக்கும் வருடம் நமக்கு
வசந்தம் வழங்கட்டும்...
எல்லாச் செயலும்
வெற்றி என்னும் இமயம் காணட்டும்..
வசந்தமும் வெற்றியும்
வாழ்நாள் முழுக்க
நம்மோடு கலந்தே இருக்கட்டும்....!

வேதனை

வலிகளும் வேதனையும் 
தொடரும் போது
வார்த்தைகள் கூட தடுமாறும் ..
பாசத்தின் நடுவே
பிளவுகள் வந்தால்
சில பிழைகள் கூட 
பிரிவாகும்....