January 11, 2011

அப்பாவுக்கு..

அன்பென்னும்  அகராதியில்
முதல் சொல்லும் நீ தானோ ...
அறிவை தந்தும்
ஆற்றலை ஈந்தும்
உருகும் உன்னத மெழுகும் நீ தானோ ...
இரும்பையே இதயமாய் கொண்டு
இன்னல்கள் பலகோடி வந்தபோதும்
கலங்கா தூணாய் நின்றவரும் நீ தானோ ...
ஈகையின் அர்த்தம்மாய்
மனித நேயத்தின் கடவுளாய்
வாழ்ந்தவரும் நீ தானோ ...
ஆசானாய், அன்னையாய் அன்பான நண்பனாய்
எண்ணற்ற அவதாரம் எனக்காக நீ எடுத்தாய்
என் நிலையில் மேலோங்க
தேய்பிறையாய் நீ தேய்ந்தாய் ...
உன் நிழலிலே வளர்ந்த ஒரு மரமாய்
துணிவோடும் துடிப்போடும்
நான் இருக்க....
துணையாக நீ வரவேண்டும்
வேடிக்கை பார்க்கும் வேற்றவனாய் அல்ல..
வாழ்க்கையை வழிநடத்தும்
பிரபஞ்சத்தின் ஒளியாய் ....



January 10, 2011

இயற்கை அன்னை..!!

எங்கும் காணும் 

இயற்கை அன்னையே
என் இதயம் போற்றும்
அனுதினம் உன்னையே
காற்றை தந்தாய்
நீரை தந்தாய்
அன்னம் தந்தாய்
உயிர்கள் வாழ
அனைத்தும் தந்தாய்
பாழும் மனிதனுக்கு
அறிவையும் தந்தாய்
அதனால் விளைந்ததோ
ஆயிரம் தொல்லை
தன் தலையில்
தானே போட்டான் கல்லை
அனைத்தும் தனதென
ஆளுமை கொண்டான்
தான் தான் வல்லவனென்று
ஆணவம் கொண்டான்
அறிவியல் கொண்டு
கருவிகள் செய்தான்
உன் வளங்களை சுரண்டி
வனங்களை அழித்தான்
மூச்சு காற்றை
நச்சு காற்றாய் நசித்தான்
எக்காலம் கடந்தாலும்
மக்காத குப்பைகளால்
மண்ணின் மடியின்
தண்ணீர் தொலைத்தான்
இத்தனை குற்றமும்
மொத்தமாய் செய்தவன்
சற்றும் வெட்கமின்றி
குற்றம் சாட்டினான் உன்னை
மழை பொய்த்தாய் நீயென
நிலம் பிரண்டாய் நீயென
தன்னையே மறந்தவன்
உன்னையே சபித்தான் ...!


முதல் காதல் ...

காவிய கண் அழகி..
உன் காகித போடோவும்
என்னை மயக்குதடி..
உன் சீன புன்னகையால் 
என்னை கவர்ந்து விட்டாய்....
இந்த வெண்ணிலவின் 
வெண்மையையும் உன் முக 
மலர்ச்சியால் தோற்கடிதாய்....
இன்று காலத்தின் விழும்பில் நீ..
உன் காதல் நெஞ்சின் மயக்கத்தில் நான்..
கோவத்தால் என்னை விரட்டி அடிக்காது 
உன் அன்பில் மட்டும் என்னை நெனைய
வைப்பாயா என் தேவதையே....!!

January 5, 2011

மறக்க முடியாத நினைவுகள்...

மறக்க முடியாத உன் நினைவுகள் 
நான் தூங்கும் போது என் 
கண்ணைத் தூங்க விடாமல் 
கலங்க வைக்கிறது 

இருந்தும் என் கண்கள் 
உன் நினைவுகளை 
சுமக்கவே தயாராகி விட்டது 

அன்று ஒரு நாள் 
பச்சைப் பசும் சோலைகள் நடுவே 
உன் மார்பில் தலை சாய்த்தேன் நான் 
அந்த நிமிடம் என்னை அறியாமலே 
காதல் அதிகரித்தது 

கண்ணா 
கண்ணாம்மூச்சி 
ஆட்டம் போல் என் 
வாழ்க்கையும் ஆகிவிட்டது 

மறக்கத்தான் நினைக்கிறேன் 
ஏனோ உன் நினைவுகள் 
மறுபடியும் வளர்கிறது 

உன்னை நான் தொலைத்த 
வேளையிலே என் வாழ்க்கையின் 
தேடல் தொடங்கியது 
இன்றுவரை தேடல் முடியாமல் 
தொடரவே செய்கிறது 

பள்ளியில் படித்த 
பாடத்தை விட 
காதல் பாடத்தை படித்ததே அதிகம் 
இருந்தும் காதல் பரீட்சையில் 
தோற்றுவிட்டேன் நான் 

காதலை மையமாக்கி நீ 
என் கனவில் 
நுழைந்தது ஞாபகம் இருக்கிறது 
அதே காதலை மையமாக்கி இன்று 
என்னை கைது செய்துவிட்டாயே 
அது ஏனோ என் இதயத்தைக் கொல்கிறது 

சோகக் கவிதையை எழுத 
மனம் இல்லை எனக்கு 
இருந்தும் என் பேனா சோகத்தை 
மட்டுமே எழுதத் துடிக்கிறது 

என் மனதில் உள்ள 
காயங்கள் மாறும் வரை 
காயம் கொண்ட கவிதைகளே 
தொடரும் 

மீண்டும்... மீண்டும்..

உன்னை நினைத்த பொழுதுகளில்
உன்னை மறக்கத்துடித்தேன்...
மறந்த பொழுதுகளில் நான் எங்கிருந்தேன்...
உன்னை மறக்க நினைத்து தோல்வி காணுகிறேன்..
தோல்வி வெற்றிக்காண படிக்கட்டுக்களாமே...?!
எத்தனைப் படிக்கட்டுக்களைக் கடந்து விட்டேன்...
ஒருமுறைத் திரும்பிப்பார்த்தும்
தலைசுற்றி சரிந்து விழுந்தேன்...
எத்தனை அடிகள் பட்டாலும் விழுவது உன் மடி என்றால் 
எத்தனை முறை வேண்டுமானாலும் விழலாம்...
ஆனால் உன் விழிகளில் கூட விழாத போது 
அழுகை பீரிட்டும் கண்ணீர் கட்டிப்பட்டு வெளிவர மறுக்கிறதே
என்னென்று சொல்வது...
ஏறத்துணிகிறேன்
உன்னை மறந்தே விடுவதென்று....
மீண்டும்... மீண்டும்... 

ஹைக்கூ - 2

அன்பு 


பிறக்கும் போது
   அழுதுகொண்டே பிறந்தேன் 
   என் இந்த பிறப்பென்று ..
   உன் அன்பை 
   கண்டதும் உணர்தேன் ..
   உன்னக்காக
   ஆயிரம் முறை 
   இப்புவியில் பிறக்கலாம் என்று..


காதல் 

* காதல் அன்பில் மிதக்கும் என்னை 
  மிதக்க வைத்து விடாதே 
  அந்த காவேரி கரை ஓரத்தில் 
  இல்லை என்ற பதில் கூறி...

ஹைக்கூ - 1

ஏக்கம் ..

* உன்னை எதிரில் பார்த்த 
  நாட்களை விட 
  உன்னை எதிர்ப்பார்த்த 
  நாட்களே அதிகம் ..
  இன்னும்
  உன்னை எதிர் பார்க்கிறேன்
  எதிரில் பார்க்க....


* சந்திக்க
   பல நாட்கள் ஆனாலும் 
  சிந்திக்க 
  ஒரு நொடி போதும்...
   .
   .
  சிந்திக்கிறேன்
  உன்னை சந்திக்க ...

நட்பு

என் கண்முன் தெரிந்த சித்திரமே 
சிறு பனித்துளியாய் என்னுள் நீ கலந்து விட்டாய்
காரணம் விலங்காது நிக்கையிலே
ஒரு புன்னகை சிந்தி என்னை மயங்க வைத்தாய் 
நித்தம் பார்க்க  துடிக்கையிலே 
என் கண்முனே வந்து நீ இருந்தாய் 
கவலையாய் நான் இங்கு இருக்கையிலே 
கலங்கியே என்னுடன் நின்றிருப்பாய் 
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும் 
என் மனம் முழுதும் நீயே பரப்பிருபாய் 
மௌனம் என்ற ஒன்றை மட்டும் 
அழகாய் வைத்து சிரித்திருப்பாய் 
நட்பு என்ற என்னை மட்டும்
உன் வாழ்வில் நிலையாய் கொண்டு
ரசித்திருப்பாய் ...!!