கலைந்து போன என் தூக்கத்திற்கு
காரணம் அறிய விழிகின்றேன்
காதல் கனவு என்றால்
கதை பேசி தீர்திடுவேன்
கவலைகள் மலையாய் நிறைந்தால் கூட
கண்ணீரில் கரைதிருப்பேன்
மௌனங்கள் மொழியாகி
உணர்வுகளை வழிநடத்த
மலரும் நினைவுகள்
என்னுள் சிறகை விரித்து பறப்பதை கண்டு
கண் முன்னே மேடையிட்டு கனா காண்கிறேன் நான்