May 29, 2018

~~நெகிழி~~

~~நெகிழி~~

வண்ண வண்ண மலர் சூடி

வாய் பிளந்து பார்த்தாயே
வட்டமென சதுரமென
வித விதமாய் வந்தாயே
இன்றென நாளையென்ன
பக்குவமாய் நீ இருக்க
பாழாய் போனதடி
பாவிமக்கள் வாழ்க்கையடி
பால்வார்த்த பூமிக்கு
பால்டாயிலாய் வந்தாயோ
வளம்பூர்த்த மண்ணுக்கு
வினையருக்க வென்றாயோ
நீடுடி நீ வாழ்க
நிலமெல்லாம் கெடுத்தாயே
நெஞ்சமெல்லாம் படபடக்க
பலநோய்கள் தந்தாயே
நிலமென்ன நீரென்ன
காசுக்கு உன்னைப்பெற்று
மூச்சுக்கு மறைப்பூட்டி
மாசுக்கு பயந்தோமே
புதுசுக்கு ஆசைப்பட்டு
பழசெல்லாம் மறந்தாச்சு
இயற்கைக்கு ஆசைப்பட்டு
இயன்றதெல்லாம் இழந்தாச்சு
சணல் கயிற்று சாபமோ
மஞ்சப்பையின் கோபமோ
இல்லை எல்லாம் தந்த
இயற்கையின் இச்சையோ
நெஞ்சோடு நெகிழ்வித்து
நிம்மதியாய் போனதெல்லாம்
நிலையின்றி நாம் வாழ
'நெகிழி'யால் மறைவோமோ..


-சுகி