நாட்குறிப்பில் எழுதப்படாதா என் நாட்கள் கூட
நகைத்தே சென்றது ....
தனிமையில் உலா வரும் வெண்ணிலவை
போன்றது உன் விதியென்று ...
செல்லா காசாய் மறைந்த என் எழுத்துகளும்
செவி கொண்டு வசை பாடியது ..
" புத்துணர்ச்சி நிறைந்த பூக்களாய்
புதுமை நிறைந்த முத்துகளாய்
இனிமை நிரம்பிய செந்தமிழின்
கவி கொண்டு தொடுத்திடுவாய்
உன் கவிதைகளை பூ மாலையாக "