March 8, 2012

கவிதை


சந்தோஷம் சங்கடம் 
இரண்டிலும் என்னை விட்டு 
பிரிந்து செல்லாத செல்ல குழந்தை நீ

என்னுள் எழுந்த குழப்பங்களுக்கு 
பல விதத்தில் ஆறுதல் சொல்லி
தோள் குடுத்த தோழி நீ

கண்கள் கலங்கி நிலையற்று நின்ற போதும் 
நிமிர்ந்து நின்று எதிர் நீச்சல் போட
கற்று தந்த அன்னை நீ

ஒவ்வொரு கவிஞன்
வாழ்விலும் நினைவிலும் வாழும் 
கவி என்னும் கரு நீ

கவிதையே 
இது கவி பாடும் பறவைகளின் 
அன்பு சமர்ப்பணம்.

No comments:

Post a Comment