வான் முழுவதும்
நட்சத்திரக் கூட்டம்
பௌர்ணமி நிலவின் வெளிச்சம்
ஜில்லென்று வீசும் பூங்காற்று
கண்களுக்கு அழகாய்
புன்னகை பூத்த சிரிப்பில் நான்
காதல் பாடும் கீதங்களுக்கு
ராகம் கூட்டும் என் மொழி எழுத்துகள்
கவிதை எழுதும் சுழல் என்று
பிடித்தவை என்னை சூழ்ந்து கொண்டாலும்
என் கவியின் கருவாய்
பிடித்தவர்களும் என்னுடன் நினைவில் !!
No comments:
Post a Comment