February 12, 2011

என் இனிய நட்பாக....

குறுஞ் செய்தியால்

மனம் நிரப்பும்

வித்தைக் கற்றவளே...

வார்த்தைகளில்

உன் உருவம் செதுக்கும்

உத்தமச் சிற்பியே...

அள்ளக் குறையாத

அன்பைச் சுரக்கும்

நட்பெனும்

அட்சயப் பாத்திரத்தில்

ஆண்பெண் எனும்

வேற்றுமை குறியீடு களைந்து

மதவாத சாதீய

மாச்சர்யங்கள் மறந்து

கரும்பில் இனிப்பாய்

கடலில் உப்பாய்

கலந்தோம் ஒன்றாய்...

வாழ்வு முழுதும்

நீடிக்கும் நட்பால்-நம்

வாழ்நாளே நீடிக்கும்..

உன் வார்த்தை சுமந்த

காற்றலைகூட

கண்ணீர் துடைக்கும் !

தவமாய் பெற்ற உன்னை

காலம் முழுவதும் காத்திருப்பேன்

என் இனிய நட்பாக....

No comments:

Post a Comment