March 8, 2012

கலைந்து போன என் தூக்கத்தின் நினைவுகள்


கலைந்து போன என் தூக்கத்திற்கு
காரணம் அறிய விழிகின்றேன்
காதல் கனவு என்றால்
கதை பேசி தீர்திடுவேன்
கவலைகள் மலையாய் நிறைந்தால் கூட 
கண்ணீரில் கரைதிருப்பேன்
மௌனங்கள் மொழியாகி 
உணர்வுகளை வழிநடத்த
மலரும் நினைவுகள் 
என்னுள் சிறகை விரித்து பறப்பதை கண்டு 
கண் முன்னே மேடையிட்டு கனா காண்கிறேன் நான் 

1 comment: